பெண் டாக்டர் தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டிய 3 டாக்டர்கள் தலைமறைவு
நாயர் ஆஸ்பத்திரியில் பெண் டாக்டரை தற்கொலைக்கு தூண்டிய 3 டாக்டர்கள் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை,
ஜல்காவை சேர்ந்தவர் டாக்டர் பயல் (வயது26). இவர் மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார். அந்த மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவர் மருத்துவ கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், பழங்குடியினத்தை சேர்ந்த டாக்டர் பயலை, அவருடன் படித்து வந்த மூத்த டாக்டர்களான ஹேமா, பக்தி, அங்கிதா ஆகியோர் சாதி ரீதியாக துன்புறுத்தி வந்ததும், இதனால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 டாக்டர்கள் மீதும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில், இதுபற்றி அறிந்ததும் டாக்டர்கள் மூன்று பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்கள் 3 பேரையும் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story