டி.வி. நடிகர் கரன் ஒபேராய் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து 2 பேருக்கு வலைவீச்சு


டி.வி. நடிகர் கரன் ஒபேராய் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 May 2019 4:41 AM IST (Updated: 27 May 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. நடிகர் கரன் ஒபேராய் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்ணை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகர் கரன் ஒபேராய். இவர் 30 வயது பெண்ணை கற்பழித்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், கரன் ஒபேராய் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண் நேற்று முன்தினம் ஒசிவாரா ஜாக்கர்ஸ் பார்க் பகுதியில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை நெருங்கி ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதில் 2 பேர் இருந்தனர். இருவரும் முகத்தை மூடியிருந்தனர்.

இந்தநிலையில், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த நபர், திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் இடது தோள்பட்டையில் குத்தினார். பின்னர் அவர்கள் ஒரு கடிதத்தை பெண் மீது போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்தநிலையில், கத்தியால் குத்தியதில் அந்த பெண் காயமடைந்தார். மேலும் அவர்கள் வீசிவிட்டு சென்ற கடிதத்தில், தன் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற வேண்டும் என எழுதப்பட்டு இருந்தது.

இதுபற்றி அந்த பெண் ஒசிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கத்தியால் குத்திய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story