மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - நாராயணசாமி உறுதி


மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 27 May 2019 6:00 AM IST (Updated: 27 May 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்த இணை ஒழுங்குமுறை மின்சாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து மின் கட்டண உயர்வு வருகிற 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

குறிப்பாக வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 20 காசு முதல் 50 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்துள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மின்கட்டண உயர்வு புதுவை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்கட்டண உயர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அதற்கான முடிவினை எடுப்போம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story