ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை 351 காலியிடங்கள்


ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை 351 காலியிடங்கள்
x
தினத்தந்தி 27 May 2019 3:56 PM IST (Updated: 27 May 2019 3:56 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கு 351 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்திய ராணுவத்துறையின் கீழ் செயல்படக்கூடியது டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம். இந்த அமைப்பு செப்டம் (CEPTAM) எனும் தகுதித் தேர்வின் அடிப்படையில் குறிப்பிட்ட பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. தற்போது டெக்னீசியன் பணிகளுக்கான செப்டம் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 351 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 26-6-2019-ந் தேதியில் 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யும் முறை:

கணினித் தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஜூன் 3-ந் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. 26-6-2019-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.drdo.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Next Story