ஸ்மார்ட் பால்பெட்டிகள்
மாணவர்கள் பாலை அடைத்து விற்பனை செய்ய ஸ்மார்ட் அட்டைப் பெட்டியை உருவாக்கி உள்ளனர்.
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, பாலை அடைத்து விற்பனை செய்ய ஸ்மார்ட் அட்டைப் பெட்டியை உருவாக்கி உள்ளது. இதில் உள்ள கியூ ஆர் குறியீடு அதன் தயாரிப்பு உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும். மேலும் இதிலுள்ள சென்சார் உணர் கருவி பாலின் தற்போதைய தரத்தை வாடிக்கையாளருக்கு காட்டிக் கொடுக்கும்.
இது பால் கெட்டுப்போகும் முன்பாக வீணாக்கப்படுவதை தடுக்கும். பால் பாக்கெட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இந்த அட்டைப்பெட்டிகள் சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்யும். இந்த ஸ்மார்ட் அட்டைப்பெட்டியை பல்வேறு பொருட்களுக்கு பயன்படுத்தவும் பரிசீலிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story