உடனடியாக உருவாகும் குவாண்டம் குகை
சுவற்றில் பந்தை விட்டு எறிந்தால் அது திரும்ப வரும் என்பது இயற்பியல் விதி. அதே நேரத்தில் குவாண்டம் துகள்களை அப்படி சுவரில் வீசியெறிந்தால் அது சுவரைத் துளைத்துக் கொண்டு அந்தப்பக்கமாக வெளியேறிவிடும்.
இந்த நுட்பத்தில் கணப்பொழுதில் சுரங்கப்பாதைகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகள் மத்தியில் உள்ளது.
மிகமிக நுண்துகள்களான அவை இயங்கும் திசை மற்றும் வேகம், துகள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த செயல்வேகத்தில் வேறுபாடு இருக்கலாம். எனவே இதில் உறுதி சொல்லவும் வாய்ப்புகள் குறைவு என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆனால் குவாண்டம் நுட்ப குகைகளை உருவாக்குவதில் முதற்கட்ட வெற்றியை விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் கிரிபித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சக்திமிக்க லேசர் கதிர்கள் மூலம் ஹைட்ரஜன் அணுக்களை வெடிக்கச் செய்து, வினாடிக்கு ஆயிரம் ஒளிஅதிர்வுகள் அளவுக்கு தடைகளை சிதைத்து வெற்றி கண்டுள்ளனர். இந்த நிகழ்வு மூலம் எவ்வளவு தூரத்திற்கு தடையை தகர்த்து குகை உருவாக்க முடியும், அதற்கு எவ்வளவு ஆற்றல் தேவைப்படும் என்பது பற்றிய மதிப்பீடும் ஆய்வும் தொடர உள்ளது.
Related Tags :
Next Story