ரப்பர் தோட்டத்தில் புகுந்து காட்டெருமை தாக்கியதில் காயம் அடைந்த பெண் சாவு
அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் புகுந்து காட்டெருமை தாக்கியதில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அருமனை,
குமரி மேற்கு மாவட்டத்தில் ஆறுகாணி, சிற்றார், பத்துகாணி உள்ளிட்ட மலையோர பகுதிகளில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். பால் வெட்டுதல், மரங்களை பராமரித்தல், முதிர்ந்த மரங்களை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் அங்கு நடக்கும். ரப்பர் தோட்டங்கள் அமைந்திருக்கும் பகுதி மலை பகுதி என்பதால் யானை, கரடி, காட்டெருமை போன்ற விலங்குகள் நடமாட்டம் இருக்கும். சில நேரங்களில் காட்டு விலங்குகள் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்து தொழிலாளர்களை தாக்கும் சம்பவமும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் அருமனை அருகே சிற்றார் அரசு ரப்பர் தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலாளர்கள் பால் வடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோட்டத்துக்குள் புகுந்த ஒரு காட்டெருமை திடீரென அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை முட்டி தூக்கி வீசியது.
இந்த பயங்கர தாக்குதலில் சிற்றார் சிலோன் காலனியை சேர்ந்த சந்திரா (வயது 44) மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பணியாளர்கள் உடனே 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சந்திரா கடந்த மாதம் 26–ந் தேதி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரா நேற்று பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வன விலங்குகளால் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் ரப்பர் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே பணியில் ஈடுபட்டிருக்கும் போது தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story