பொது பாதையை அடைப்பதாக கூறி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணி தடுத்து நிறுத்தம்
மயிலாடுதுறையில், பொது பாதையை அடைப்பதாக கூறி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கு புறத்தில் 25 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளில் வசிப்பவர்கள் மின் இணைப்பு பெற்று நகராட்சிக்கு வரியும் செலுத்தி வருகின்றனர்.் இவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்த வேளாண்மை விரிவாக்க வளாகத்தின் வழியே செல்லும் பாதையை காலம், காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணியின்போது கார் பார்க்கிங் அமைக்க பொதுமக்கள் சென்றுவரும் பொது பாதையை அடைப்பதற்கான பணிகள் நடந்தது.
பணி தடுத்து நிறுத்தம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்கள், தாங்கள் செல்லும் பாதையை அடைக்கக்கூடாது. இதை மீறி அடைத்தால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். இந்த பாதையை அடைத்தால் அவசரகாலத்துக்கு கூட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். அதனால் பாதையை அடைக்கக்கூடாது என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பொதுப்பாதை இருப்பதால் நாங்கள் இங்கே பிளாட் வாங்கி குடியேறினோம். ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. அப்போது மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன் பேரில் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வழி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.
பரபரப்பு
இந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக பாதையை அடைப்பது தவறு என கூறினர். இந்த பாதை பிரச்சினை குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஒருசிலர் தொடர்ந்த வழக்கில் மேல்முறையீடு செய்து கோர்ட்டில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. மேல்முறையீட்டின்போது குடியிருப்போர் ஆஜர் ஆகாததால் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து உள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை நடைபாதையை அடைப்பதில்லை என கூறினர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story