தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் சிம்மவாகன காலசம்கார பைரவர் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு நேற்று முன்தினம் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் மஞ்சள், திரவியம், மாப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கால பைரவருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல், திருக்குவளை அருகே திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வாய்மேடு
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Related Tags :
Next Story