தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி பண்ணை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் பண்ணை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கி வரும் வெள்ளாள விடுதி மாநில எண்ணெய்வித்து பண்ணை, குடுமியான்மலை அறிஞர் அண்ணா பண்ணை, வம்பன் பயறுவகை பெருக்கப்பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு புதுக்கோட்டை கலெக்டரின் உத்தரவின்படி, ஒரு நாளைக்கு ரூ.251 கூலி வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக கூலி உயர்வு கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1.6.2018 முதல் தோட்டக்கலை பண்ணை தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.300 கூலி வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பண்ணை தொழிலாளர்களுக்கு உடனடியாக தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தினக்கூலி வழங்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர் சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில பொது செயலாளர் அரசப்பன் தலைமை தாங்கினார்.
அதிகாரி பேச்சுவார்த்தை
மாநில துணை தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தர்மராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். இது குறித்து தகவல் அறிந்த வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா மற்றும் டவுன் போலீசார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பண்ணை தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story