மாட்டு வண்டி மீது மோதி விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலி


மாட்டு வண்டி மீது மோதி விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 May 2019 3:45 AM IST (Updated: 29 May 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு வண்டி மீது மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் மேலகாலனியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் தினேஷ் (வயது22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அரித்துவாரமங்கலத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்த தினேஷ் மற்றும் அவருடைய நண்பர் பாபநாசம் அருகே உள்ள கோவத்தக்குடியை சேர்ந்த குணசேகரன் மகன் சுகுமார் (18) ஆகிய இருவரும், சம்பவத்தன்று அம்மாப்பேட்டையில் இருந்து அரித்துவாரமங்கலத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை தினேஷ் ஓட்டினார்.

மாட்டு வண்டி மீது மோதியது

இருகரை அருகே செம்பியநல்லூர் வீரன்கோவில் என்ற இடத்தில் சென்றபோது சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த சுகுமார் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, அரித்துவாரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story