கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் இ.ஜி.சுகவனம், மாநில மகளிர் அணி தலைவி காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழாவை வருகிற ஜூன் 3-ந் தேதி கொண்டாடுவது குறித்தும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
குடிநீர் பிரச்சினை
கூட்டத்தில் வெற்றியை பெற்று தந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வது. கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் கொண்டாடுவது, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.
மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க மாவட்ட கலெக்டரை வலியுறுத்துவது, மழைக்காலத்திற்கு முன்பே மாவட்டத்தில் ஏரி, குளங்கள், அணைகளின் கால்வாய்களை தூர்வாரிட வேண்டும். கடும் வறட்சியால் காய்ந்து போன மா, தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், சாவித்திரி கடலரசு மூர்த்தி, மாவட்ட பொருளாளர் வி.ஜி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், தம்பிதுரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, நரசிம்மன், கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் எஸ்.கே.நவாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story