வீரபாண்டி பகுதியில், வீட்டில் பெண்களை வைத்து விபசாரம், 4 பேர் கைது - 2 அழகிகள் மீட்பு


வீரபாண்டி பகுதியில், வீட்டில் பெண்களை வைத்து விபசாரம், 4 பேர் கைது - 2 அழகிகள் மீட்பு
x
தினத்தந்தி 29 May 2019 3:45 AM IST (Updated: 29 May 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட 4 பேரை திருப்பூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 அழகிகளை போலீசார் மீட்டனர் இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட கல்லாங்காடு வாய்க்கால் மேடு பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார், திருப்பூர் கல்லாங்காடு வாய்க்கால் மேடு 7-வது வீதியைச் சேர்ந்த தீபா (வயது 28) என்பவர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் விபசார தொழிலில் ஈடுபட்ட 2 அழகிகளை போலீசார் மீட்டனர். மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட வீரபாண்டி ரெயின்போ காலனி பகுதியை சேர்ந்த ராஜா (29), முருகம்பாளையம் புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (32), குமார் நகர் சாமுண்டிபுரம் சிவமணி (32) ஆகியோரையும், மற்றும் தீபாவையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசார் விசாரணையில் தீபா, ராஜா, மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தங்கள் செல்போன் எண்ணை விளம்பரம் செய்து அதன் மூலம் வரும் நபர்களிடம் விபசாரத்திற்கு அழைத்து வந்து பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் அனைத்து மகளிர் போலீசார் விபசார தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 4 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அழகிகள் 2 பேரை மீட்டு காப்பகத்தில் கொண்டு சேர்த்தனர்.

Next Story