தூத்துக்குடி அருகே பரிதாபம் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
தூத்துக்குடி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி,
சென்னை திருவொற்றியூர் ராஜாசண்முகம் நகரை சேர்ந்தவர் சாமிராஜன். இவருடைய மகன் ராமசாமி(வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கும், ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.
கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஓட்டப்பிடாரத்துக்கு வந்து விட்டார். இந்த நிலையில் மனைவியை மீண்டும் அழைத்து செல்வதற்காக ராமசாமி ஓட்டப்பிடாரத்துக்கு வந்தார். அவர் மனைவியை ஊருக்கு அழைத்தாராம். ஆனால் அவர் வர மறுத்து விட்டாராம். இதில் மனம் உடைந்த அவர் தூத்துக்குடி அருகே உள்ள சின்னகண்ணுபுரத்துக்கு வந்தார்.
அங்கு உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். பின்னர் அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story