சிக்கமகளூருவில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்களை புறக்கணிப்பதாக புகார் விசாரணை நடத்தி வருவதாக கலெக்டர் பேட்டி
சிக்கமகளூருவில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்களை புறக்கணிப்பதாக வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருவதாக கலெக்டர் கூறினார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூருவில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்களை புறக்கணிப்பதாக வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருவதாக கலெக்டர் கூறினார்.
புகார்கள் குறித்து விசாரணை
சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் பாகதி கவுதம் நேற்று முன்தினம் மாலை தனது அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்ததும் கலெக்டர் பாகதி கவுதம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்து எங்களை ஒதுக்குகிறார்கள், எங்களை துன்புறுத்துகிறார்கள் என்று 35 புகார்கள் வந்து உள்ளன. இந்த புகார்கள் குறித்து நான் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறேன்.
விவசாய நிலம் வழங்க முடிவு
தரிகெரே தாலுகா லக்குவள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த திம்மபோவி என்பவர் மர்மமான முறையில் இறந்து உள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். அதுபோல சிக்கமகளூரு அருகே மல்லேசுவரா கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொழிற்சாலை தொடங்க வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். ஆனால் அவருக்கு கடன் வழங்கப்படவில்லை என்று எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அவருக்கு உடனடியாக கடன் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மாவட்டத்தில் ரூ.15 லட்சம் வரை ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கி வைத்து உள்ளோம். வீடுகள் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கரில் நிலம் ஒதுக்கி ஆச்சார்யா திட்டத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்படும். மேலும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் வாழ்க்கையை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு விவசாய நிலம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story