மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி 7 பேர் காயம் + "||" + 7 people were injured in the Jallikattu bulls at the Ayyanar temple in Pudukottai

புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி 7 பேர் காயம்

புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி 7 பேர் காயம்
புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார்கோவில் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார்கோவில் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விராலிமலை, கீரனூர், இலுப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 760 காளைகள் பங்கேற்றது. 220 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.