குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை புதுக்கோட்டை நகரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் பழுதடைந்து குடிநீர் வினியோகத்திற்கு தடையாக இருக்கும் மேல்நிலை மற்றும் சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டி மின் மோட்டார்களை சரிசெய்து குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுசிலா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் டி.சலோமி உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தே.காயத்திரி, ஜெ.தனலெட்சுமி, கே.நாடியம்மை, ஜெயந்தி, சுபாஷினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்திலிருந்து அவர்கள் ஊர்வலமாக அண்ணாசிலைக்கு வந்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர்.

Related Tags :
Next Story