ஈரோடு மாவட்ட கோர்ட்டுகளில் காலிப்பணியிடங்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


ஈரோடு மாவட்ட கோர்ட்டுகளில் காலிப்பணியிடங்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 30 May 2019 4:00 AM IST (Updated: 30 May 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்ட கோர்ட்டுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட நீதித்துறையில் உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள கணினி இயக்குனர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஒளிப்பட நகல் எடுப்பவர், அலுவலக உதவியாளர், மசால்சி, காவலர், சுகாதார ஊழியர், மின்தூக்கி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவிகளுக்கு உண்டான சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் இனசுழற்சி முறைகள், விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முறை, மாதிரி விண்ணப்ப படிவம் ஆகியவை குறித்த விவரங்கள் www.dist-r-icts.ec-ourts.gov.in/er-o-de என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மாதிரி விண்ணப்ப படிவத்தை மேற்கண்ட இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் வருகிற 12-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு -638011 என்ற முகவரிக்கு சாதாரண தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

இதர வழிமுறைகளில் வரும் தபால்கள் மற்றும் காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வு சம்பந்தமான நடவடிக்கைகளை எவ்வித முன் அறிவிப்புமின்றி ஒத்தி வைக்கவும் மற்றும் ரத்து செய்யவும் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது. அனைத்து பணியிடங்களும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் நிரப்பப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட முதன்மை நீதிபதி உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளது.

இதேபோல் ஈரோடு தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பா.மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட நீதித்துறைக்கு உள்பட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் (ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு) அலுவலக உதவியாளர், மசால்ஜி என்ற பணி, இரவுக்காவலர், மசால்ஜி மற்றும் இரவுக்காவலர், தோட்டப்பணியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகள் தொடர்பான விவரங்கள் www.dist-r-icts.ec-ourts.gov.in/er-o-de என்ற இணையதளத்தில் விவரமாக வெளியிடப்பட்டு உள்ளது.

அதைப்பார்த்து தகுதியான நபர்கள் வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தலைமை நீதித்துறை நடுவர், தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஈரோடு- 638011 என்ற முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்பலாம். இதர வழிமுறைகளில் வரும் தபால்கள் மற்றும் காலதாமதமாக வரும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தேர்வு சம்பந்தமான நடவடிக்கைகளை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி ஒத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ ஈரோடு தலைமை நீதித்துறை நடுவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பா.மோகன் கூறி உள்ளார்.

Next Story