மேற்கு கடற்கரை பகுதியில் 1-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது கரை திரும்பும் குளச்சல் விசைப்படகு மீனவர்கள்
மேற்கு கடற்கரை பகுதியில் 1-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குளச்சல் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புகின்றனர்.
குளச்சல்,
கடலில் மீன் வளத்தை காக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதியில் மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களின் விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் வலைகளை சீரமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த தடைக்காலம் வருகிற 16-ந் தேதி வரை உள்ளது.
இதற்கிடையே மேற்கு கடற்கரை பகுதியில் வருகிற 1-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. கடந்த 1 வருடத்துக்கு முன்பு வரை மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் மட்டும் இருந்தது. அதன் பிறகு தடைக்காலம் 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.
குளச்சலை தங்குதலமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. இவர்கள் ஆழ்கடலில் 12 நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். வருகிற 1-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதையொட்டி மீன்பிடிக்க சென்ற குளச்சல் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பி வருகிறார்கள். தடைக்காலத்தையொட்டி இந்த மீனவர்கள் விசைப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கரை திரும்பிய விசைப்படகுகளில் குறைந்த அளவு கணவாய் மீன்களே கிடைத்தன. இந்த மீன்கள் குளச்சல் துறைமுக ஏலக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலமிடப்பட்டது.
ஏலம் எடுக்கப்பட்ட மீன்கள் ஐஸ் பெட்டிகளில் வைக்கப்பட்டு கேரளா போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது களை கட்டி இருக்கும் குளச்சல் மீன்பிடி ஏலக்கூடம் வருகிற 1-ந் தேதிக்கு பிறகு களை இழந்து காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story