திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், வேளாண் இணை இயக்குனர் சந்துரு, வெண்ணாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டை செல்வம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் அனைத்து விவசாயிகளும் கருப்பு பேட்ஜ் அணிந்து காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த அனுமதி அளித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளை போலீசார் அனுமதிப்பதில்லை.
எனவே தமிழகத்தில் ஒருபோதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற 2 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அப்போது அனைத்து விவசாயிகளும், கலெக்டர் முன்பாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தீர்மானங்கள் குறித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து கலெக்டர் ஆனந்த், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தினால் குறைதீர்க்கும் கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள கோரிக்கை குறித்து பேசினர்.

Related Tags :
Next Story