பிரதமராக மோடி பதவி ஏற்பு: பேராவூரணியில் 1 ரூபாய்க்கு டீ வழங்கிய பா.ஜனதா தொண்டர்


பிரதமராக மோடி பதவி ஏற்பு: பேராவூரணியில் 1 ரூபாய்க்கு டீ வழங்கிய பா.ஜனதா தொண்டர்
x
தினத்தந்தி 31 May 2019 4:15 AM IST (Updated: 30 May 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

பிரதமராக மோடி நேற்று பதவி ஏற்றுக்கொண்டதையொட்டி பேராவூரணியில் 1 ரூபாய்க்கு பா.ஜனதா தொண்டர் டீ வழங்கினார்.

பேராவூரணி,

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் டீக்கடை நடத்தி வருபவர் ராஜசேகர் (வயது55). பா.ஜ.க. தொண்டர். இந்தநிலையில் 2–வது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதையொட்டி நேற்று மட்டும் ராஜசேகர் பொதுமக்களுக்கு 1 ரூபாய்க்கு டீ வழங்க முடிவு செய்தார்.

அதன்படி நேற்று ராஜசேகர் கடையில் 1 ரூபாய்க்கு டீ விற்பனையை தொடங்கினார். இதில் பாரதீய ஜனதா கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பண்ணவயல் இளங்கோ கலந்துகொண்டு, டீ விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் வீரா, ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி செந்தில்குமார், ஒன்றிய துணைத்தலைவர் பாலமுருகன், நகர தலைவர் முருகானந்தம், நகர இளைஞரணி தலைவர் வீரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து டீக்கடை நடத்தி வரும் ராஜசேகர் கூறுகையில், பிரதமரின் கொள்கைகளால் கவரப்பட்டு, அவரது அபிமானியாக மாறினேன். பிரதமர் பதவி ஏற்கும் நாள் மட்டும் 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்கிறேன். அன்று மட்டும் ஆயிரம் கப் டீ விற்பனை ஆனது என்றார்.

Next Story