கொத்தடிமையாக மீட்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு
வேலூரை அடுத்த பொன்னையில் கொத்தடிமையாக மீட்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது.
அடுக்கம்பாறை,
திருவள்ளூர் மாவட்டம், செதில்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 22). இவரது மனைவி சோனியா (21). இவர்களுக்கு சாரதி(4), சத்யா(2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டம், பொன்னையை அடுத்த மார்த்தாண்டகுப்பத்தை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் பசுபதி என்பவரிடம் பெற்ற கடன் பாக்கிக்காக சரவணன், அவரது மனைவி சோனியா, சரவணனின் தாயார் குமாரி(40) மற்றும் 2 குழந்தைகள் உள்பட 15 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சரவணன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த 15 பேர் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட சரவணனின் மனைவி சோனியா வயிற்று வலியால் அவதிப்பட்டார். விசாரித்தபோது சோனியா 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் சோனியா உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். கருச்சிதைவு செய்யாவிட்டால் சோனியா உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் அவருக்கு டாக்டர்கள் கருக்கலைப்பு செய்தனர். தொடர்ந்து சோனியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story