முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
முறையாக குடிநீர்வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்டு 15 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதி மக்களுக்காக பாலாற்று படுகையில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் நிரப்பி பேரூராட்சி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததால் கோடைகாலமான தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் வார்டு வாரியாக 5 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட சேர்க்காடு பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் நேற்று காலை முதலே குடிநீருக்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வாலாஜாபாத்- ஓரகடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பகுதி மக்கள் வாலாஜாபாத் பகுதி முழுவதும் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கின்றனர். அந்த குடிநீரும் சேர்காடு பகுதியில் முறையாக வருவதில்லை. இதனால் நாங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறோம். மேலும் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும் குடிநீரும் எந்த நேரம் வினியோகிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர் என்றனர். இதையடுத்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தெரிவித்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story