திருவாரூர் நகராட்சி பள்ளி அருகே சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


திருவாரூர் நகராட்சி பள்ளி அருகே சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 May 2019 4:00 AM IST (Updated: 31 May 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் நகராட்சி பள்ளி அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர்-கேக்கரை செல்லும் பகுதி ராமகே சாலையில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே நகராட்சி கழிவுநீர் சேகரிப்பு நிலையம் உள்ளது. இந்த சேகரிப்பு நிலையத்திற்கு கேக்கரை பகுதியில் இருந்து பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது ராமகே சாலையில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வழிந்தோடுகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

நடவடிக்கை

இதன் அருகில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தநிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் தொற்றுநோய் ஏற்படும் அவலம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளி குழந்தைகளின் நலன்கருதி உடனே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story