அத்தியூரில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
அத்தியூரில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் காலனியின் முன்புறம் உள்ள அம்பேத்கர் சிலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு சில சமூக விரோதிகள் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் ஆகியோர் தலைமையில், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய அனைத்து நபர்களையும் கைது செய்ய கோரி அத்தியூர்- பெரம்பலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய அனைத்து நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அத்தியூர்- பெரம்பலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story