லாரி மோதி வாலிபர் பலி


லாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 31 May 2019 4:00 AM IST (Updated: 31 May 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

பெருஞ்சுனை முக்கம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை சேர்ந்தவர் ராஜ்முகமது. இவரது மகன் பகுருதீன் (வயது 20). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று பகுருதீன் மோட்டார் சைக்கிளில் அன்னவாசலில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். பெருஞ்சுனை முக்கம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பகுருதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பகுருதீன் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், மறுநாளே விபத்தில் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

Next Story