ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறப்பு கல்வி பொருட்கள் வாங்க குழந்தைகள்-பெற்றோர் ஆர்வம்


ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறப்பு கல்வி பொருட்கள் வாங்க குழந்தைகள்-பெற்றோர் ஆர்வம்
x
தினத்தந்தி 31 May 2019 4:15 AM IST (Updated: 31 May 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை முடிவதையொட்டி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி கல்வி பொருட்கள் வாங்குவதற்கு குழந்தைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கடைவீதியில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அன்னவாசல்,

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, காலணி கடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பூக்கடைகள், பழக்கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

பள்ளி சீருடை வாங்க...

இதையொட்டி தங்களது குழந்தைகளுக்கு பள்ளி சீருடை, புத்தக பை, நோட்டுகள், பேனா, பென்சில் போன்ற கல்வி பொருட்கள் வாங்க ஜவுளிக் கடைகள், புத்தக பை விற்கும் கடைகள், பென்சில், பேனா போன்ற பொருட்கள் விற்கும் ஸ்டேஷனரி கடைகளில் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. அப்போது குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் கடைவீதி பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது

மொத்தத்தில் இந்த பகுதிகளில் கல்வி பொருட்கள் வாங்க பெற்றோரும், அவர்களது குழந்தைகளும் வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் காலணிகள் விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

Next Story