முப்பந்தலில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


முப்பந்தலில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
x
தினத்தந்தி 30 May 2019 10:45 PM GMT (Updated: 30 May 2019 9:09 PM GMT)

முப்பந்தல் மலையில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக சேர்ந்த 246 போலீசாருக்கு அணிவகுப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு சட்டம் குறித்து வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சிகள் சுமார் 7 மாதங்கள் வரை நடந்தது.

இந்த நிலையில் இறுதி கட்ட பயிற்சியாக துப்பாக்கி சுடும் பயிற்சி முப்பந்தல் மலையில் நேற்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய பயிற்சி மாலை வரை நடந்தது. முதற்கட்டமாக 100 போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் தம்பிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, பயிற்சி அளித்தனர்.

2-வது நாளாக...

சாதாரண துப்பாக்கி மற்றும் எந்திர வகை துப்பாக்கிகளை கையாள்வது குறித்து விளக்கப்பட்டது.

இந்த பயிற்சி 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Next Story