உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு
புதுவை உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்ந்துள்ளது.
இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 1-1-2019 முதல் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதுபோல் புதுவை அரசின் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தற்போது 9 சத வீதமாக உள்ள அகவிலைப்படி 1-1-2019 முதல் 12 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வினால் உள்ளாட்சித்துறையில் பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்காக ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.3.5 கோடி கூடுதலாக செலவாகும் என்று உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story