மாவட்ட செய்திகள்

நெய்வேலியில், இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 6 மாதத்தில் விபரீத முடிவு + "||" + Neyveli, A young woman, committed suicide, committed suicide

நெய்வேலியில், இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 6 மாதத்தில் விபரீத முடிவு

நெய்வேலியில், இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 6 மாதத்தில் விபரீத முடிவு
நெய்வேலியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். திருமணமான 6 மாதத்தில் நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெய்வேலி,

நெய்வேலி 31-வது வட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 31), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அஞ்சலைதேவி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.

இந்த நிலையில் அஞ்சலைதேவிக்கு கடந்த சில மாதமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த அஞ்சலைதேவி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டதாக தெரிகிறது. அப்போது அஞ்சலைதேவியின் தாயார் அரசாயி, வீட்டிற்கு வந்தார். அங்கு அஞ்சலைதேவி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட்டு அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்று திரண்டனர்.

பின்னர், தூக்கில் தொங்கிய அஞ்சலைதேவியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் அஞ்சலைதேவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து அரசாயி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே திருமணமான 6 மாதத்தில் அஞ்சலைதேவி இறந்ததால் அவரது சாவுக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீவைகுண்டம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. திருச்செந்தூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
திருச்செந்தூர் அருகே காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. கணவனை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஊத்துக்கோட்டையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. கயத்தாறு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
கயத்தாறு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
5. திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை வரதட்சணை கொடுமையா? போலீசார் விசாரணை
திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்த 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...