மத்தூரில், 4-ந் தேதி பனைமர தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம்
மத்தூரில் வருகிற 4-ந் தேதி பனைமர தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது
கிருஷ்ணகிரி,
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனை மரம் அதிகமாக உள்ள மத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பனைமர தொழிலாளர்களின் நலன் கருதி தொழிலாளர் நலத்துறை மூலம் பனை மரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதற்காக போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வருகிற 4-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர்கள் நலவாரியங்கள் அமைத்து அதில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுனர்கள் உள்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து அவர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் ஈமச்சடங்கு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
எனவே, தற்போது பனை மரம் சார்ந்த தொழிலாளர்களை தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தொழிலாளர்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், 2 புகைப்படம், அசல் குடும்ப அட்டை, அரசிதழ் பதிவு செய்ய அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்ற குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கான படிவம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களின் பதிவினை இந்த முகாமில் கலந்துகொண்டு புதுப்பித்துகொள்ளலாம். மேலும் ஏற்கனவே பதிவு பெற்ற, ஆதார் எண் பதிவு எண்ணுடன் இணைக்காத தொழிலாளர்கள் தங்களது ஆதார் எண்ணை இந்த முகாமின் போது அளித்து தங்களது பதிவு எண்ணுடன் சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story