நாமக்கல்லில் இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்


நாமக்கல்லில் இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 1 Jun 2019 4:30 AM IST (Updated: 1 Jun 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ‘இ-சேவை’ மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்கள், பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

‘இ-சேவை’ மைய ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் யூனியன் ஆப் ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். எம்பிளாயீஸ் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபரீஸ் தலைமை தாங்கினார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம், பி.எஸ்.என்.எல். எம்பிளாயீஸ் யூனியன் சங்க செயலாளர் ராமசாமி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடக்கி வைத்தார்.

‘இ-சேவை’ மைய ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க கோரியும், ‘இ-சேவை’ மையங்களை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மேலும் பல ஆண்டுகளாக சேவை மையங்களில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்குவதோடு ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ‘இ-சேவை’ மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Next Story