கூட்டுறவுத்துறை சார்பில் ‘பெட்ரோல் பங்க்’ அமைச்சர் தொடங்கி வைத்தார்


கூட்டுறவுத்துறை சார்பில் ‘பெட்ரோல் பங்க்’ அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:30 AM IST (Updated: 1 Jun 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜையில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

மதகுபட்டி ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் சிவகங்கை- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மதகுபட்டி அருகே பெட்ரோல் பங்க் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற் றது. அமைச்சர் பாஸ்கரன் பெட்ரோல் பங்க் கட்டிட பூமி பூஜையில் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது:-

கூட்டுறவுத்துறை எப்போதும் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள துறையாகும். அந்த வகையில் தற்போது மக்கள் மேலும் பயனடையும் விதமாக கூட்டுறவுத்துறை சார்பில் இந்த பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பெட்ரோல் பங்க் செயல்படுவதற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்யப்பட்டு, பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த பணி விரைவில் முடிந்து பங்க் செயல்படத் தொடங்கும். இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் பெட்ரோல் பங்க்கை அரசே நடத்தும் போது நிர்ணயிக்கப்பட்ட விலையில் சரியான கட்டணத்தில் தங்கு தடையின்றி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூட்டுறவுத்துணை இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், துணைப்பதிவாளர் திருவள்ளுவன், நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், சிவகங்கை தாசில்தார் கண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சந்திரன், சசிக்குார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story