ஆரணி தாலுகாவில் 7-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம் கிராமங்கள் வாரியாக முழு விவரம் அறிவிப்பு


ஆரணி தாலுகாவில் 7-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம் கிராமங்கள் வாரியாக முழு விவரம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2019 4:00 AM IST (Updated: 1 Jun 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி தாலுகாவில் 7-ந் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது. எந்தெந்த கிராமங்களுக்கு எப்போது ஜமாபந்தி நடைபெறும் என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணி, 

தமிழ்நாடு முழுவதும் தாலுகா வாரியாக வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும். ஜமாபந்தியின்போது கிராமங்களின் வருவாய் தொடர்பான கணக்குகள் சரிபார்க்கப்படுவதோடு கிராம மக்கள் குறைகளை தெரிவித்து பயனடையவும் வாய்ப்பு உள்ளது.

இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டன. நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டபின் இப்போது மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் உள்பட பொது நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.

அதன்படி ஆரணி தாலுகாவில் இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள் வருமாறு:-

7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கண்ணமங்கலம் உள்வட்டத்தை சேர்ந்த காட்டுக்காநல்லூர், கொளத்தூர், கண்ணமங்கலம், வண்ணாங்குளம், 5.புத்தூர், அய்யம்பாளையம், மேல்நகர், கீழ்நகர், அத்திமலைப்பட்டு ஆகிய 9 ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்கள்.

10-ந் தேதி (திங்கட்கிழமை) அக்ராபாளையம் உள்வட்டத்தை சேர்ந்த சிறுமுர், பூசிமலைக்குப்பம், 12.புத்தூர், மொரப்பந்தாங்கல், வெட்டியாந்தொழுவம், அக்ராபாளையம், அரியப்பாடி, சேவூர், அடையபலம், மெய்யூர், முள்ளண்டிரம் ஆகிய கிராமங்கள்.

11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முள்ளிப்பட்டு உள்வட்டத்திற்குட்பட்ட குண்ணத்தூர், நடுக்குப்பம், காமக்கூர்பாளையம், முள்ளிப்பட்டு, புங்கம்பாடி, புலவன்பாடி, சென்னானந்தல், அரையாளம் ஆகிய கிராமங்கள்.

12-ந் தேதி (புதன்கிழமை) எஸ்.வி.நகரம் உள்வட்டத்திற்குட்பட்ட இராட்டினமங்கலம், வெள்ளேரி, ஆதனூர், இரும்பேடு, எஸ்.வி.நகரம், மட்டதாரி, ராந்தம்கொரட்டூர், பனையூர், ஒகையூர், மாமண்டூர் ஆகிய கிராமங்கள்.

13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆரணி உள்வட்டத்தை சேர்ந்த மருசூர், ஆகாரம், விண்ணமங்கலம், தச்சூர், கல்பூண்டி, பையூர், வேலப்பாடி, நெசல், வடுகசாத்து, ஆரணி டவுன் ஆகிய பகுதிகள்.

ஜமாபந்தி அலுவலராக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இல.மைதிலி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறை மனுக்களை பெற்றுக்கொள்கிறார். அவரிடம் பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து மனு அளித்து தீர்வு காணலாம். இறுதி நாளான 13-ந் தேதி மாலையில் ஜமாபந்தி நிறைவு விழாவும், விவசாயிகள் மாநாடும் நடைபெற உள்ளதாக தாசில்தார் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, வட்டவழங்கல் அலுவலர் மணி ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story