ஸ்பிக்நகரில் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு


ஸ்பிக்நகரில் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் ஸ்பிக்நகரில் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் ஸ்பிக்நகரில் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.

நிர்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக்நகரில் கட்சி அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 3-ந் தேதி கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்திட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் பிரமசக்தி, ஒன்றிய கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story