மாவட்ட செய்திகள்

கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? பெரிய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை + "||" + Are mangoes being sprinkled with carbide stone? Tested by the authorities

கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? பெரிய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை

கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? பெரிய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை
கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்பது குறித்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

புதுச்சேரி,

பெரும்பாலான பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதாக உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவுக்கு புகார்கள் வந்தன. தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய நேற்று திடீர் சோதனை நடைபெற்றது.

அதிகாரி தன்ராஜ் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் இதுபோன்ற சோதனைகள் நடந்து தொடர்ச்சியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகளான ‌ஷந்தன்சிங், இளங்கோவன் ஆகியோரும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது சில கடைகளில் சந்தேகத்திற்கு இடமாக மாம்பழங்கள் இருந்தன. அந்த மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவற்றில் சில மாம்பழங்களை ஆய்வுக்கும் அதிகாரிகள் எடுத்து சென்றனர். சுமார் 13 கடைகளில் இதுபோன்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆனால் கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் ஏதும் சிக்கவில்லை.

அவ்வாறு கார்பைடு கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இதேபோல் சோதனை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் சிக்கியது.
2. வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கின
சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன.
3. பெருந்துறை பகுதியில் வாகன சோதனை: போக்குவரத்து விதிகளை மீறிய கிரேன்– கார் பறிமுதல்; 50 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து அதிகாரி நடவடிக்கை
பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய கிரேன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 50 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
4. ரூ.168 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்டம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
உத்தனப்பள்ளியில் ரூ.168.07 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
5. ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை; சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தகவல்
‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்துள்ளார்.