பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்பு: பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்பு: பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:00 AM IST (Updated: 1 Jun 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றதை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நெல்லை, 

பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றதை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சேரன்மாதேவி

பாரத பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றதை முன்னிட்டு, சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஒன்றிய தலைவர் நாலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அன்புராஜ் தலைமையிலும், திசையன்விளையில் நகர செயலாளர் தர்மராஜ் தலைமையிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் தேரடி வீதியில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு ரொட்டி, பிஸ்கட், பழங்கள் வழங்கப்பட்டன. பா.ஜ.க. நிர்வாகி ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம், வேட்டி-சேலை வழங்கப்பட்டது. பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன், நிர்வாகி குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மானூரில் பா.ஜ.க. மாவட்ட பிரதிநிதி சக்தி பரமேஷ் தலைமையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

பிரதமராக நரேந்திமோடி மீண்டும் பதவி ஏற்றதை முன்னிட்டு, கடையம் அருகே திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் வாஞ்சி இயக்க நிறுவனர் ராமநாதன் தலைமையில், பொதுமக்களுக்கு இலவசமாக தேநீர் வழங்கப்பட்டது.

தென்காசி

தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு பா.ஜ.க. நகர தலைவர் திருநாவுக்கரசு தலைமையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். குற்றாலத்தில் நகர தலைவர் செந்தூர்பாண்டியன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

சிவகிரி சேனைத்தலைவர் திருமண மண்டபம் அருகில் பா.ஜ.க. நகர தலைவர் கருப்பையா தலைமையில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோன்று சிவகிரி பஸ் நிலையம், அம்பேத்கர் சிலை அருகில், 7-ம் திருநாள் மண்டபம் சந்திப்பு பகுதியிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Next Story