விமான நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு சாவு தாய்க்கு எழுதிய பிறந்தநாள் வாழ்த்து கடிதம் சிக்கியது


விமான நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு சாவு தாய்க்கு எழுதிய பிறந்தநாள் வாழ்த்து கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 1 Jun 2019 4:30 AM IST (Updated: 1 Jun 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

ஏர்கோ விமான நிறுவனத்தின் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை கடிதத்தில் அவர் தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

நாக்பூர்,

ஏர்கோ விமான நிறுவனத்தின் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை கடிதத்தில் அவர் தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தற்கொலை

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஏர்கோ’ தனியார் விமான நிறுவனத்தில் நாக்பூர் கிளையில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் மந்தன் மகேந்திர சவான்.

இவர் நேற்று மதியம் அஜ்னி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சந்திராமணி நகரில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மந்தன் மகேந்திர சவானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் வீட்டில் சோதனை செய்தபோது, அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து

அதில், “என்னை மன்னித்துவிடுங்கள், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா” என்ற வார்த்தை எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

மந்தன் மகேந்திர சவானின் தாய் ஒரு பெண் போலீஸ் ஆவார். அவருக்கு நேற்று முன்தினம் தான் பிறந்தநாளாகும். இந்த நிலையில் அவர் மரணத்திலும் தனது தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மந்தன் மகேந்திர சவானின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என அவரின் தந்தை கூறியுள்ளார். இருப்பினும் வேலைபளு காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story