19 மொழிகள் பேசும் 20 வயது இளைஞர்
கனடா நாட்டு 20 வயது இளைஞர் ஒருவர், 19 மொழிகளில் சரளமாகப் பேசி ஆச்சரியப்படுத்துகிறார்.
கனடாவின் மான்ட்ரியலைச் சேர்ந்த ஜார்ஜஸ் அவாட் என்ற அவர், சாதாரணமாக பிரெஞ்சு மொழியில் பேசிவந்தாலும், மேலும் 18 மொழிகளில் பேசும் திறமை பெற்றுள்ளார்.
இவற்றில் பெரும்பாலானவற்றை அவர் இணையம், காணொளிகள், இசை மற்றும் நண்பர்களுடனான உரையாடலின்போது அதிகளவில் பயன்படுத்துகிறார்.
தனது திறமை பற்றி இளைஞர் ஜார்ஜஸ் அவாட் கூறுகையில், “நான் அதிகம் கிரகிக்கும் திறமையை கொண்டவன். அதனால் எனது பன்மொழியறிவை மேம்படுத்துவதற்காக காணொளிகள், திரைப்படங்கள் மற்றும் இசை வடிவங்களைக் கேட்பது உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன்’’ என்கிறார்.
அத்துடன் உரையாடல்களைக் கேட்பது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது உள்ளிட்ட செயல்பாடுகள் மூலமும் பன்மொழிப் புலமையை வளர்த்துக்கொள்வதாகக் கூறுகிறார்.
இவர் பிரெஞ்சு மொழி தவிர, சீன மொழி, அரபி, ஆங்கிலம், ஜப்பானிய மொழி, ஸ்பானிஷ், போர்ச்சுக்கல், இத்தாலியன், ஜெர்மன், ரஷ்ய மொழி, ஹீப்ரு, ரோமானிய மொழி, சுவீடன், ஜார்ஜியன், ஆர்மீனியன், கான்டோனிஸ், கொரியன், எஸ்பெரென்டோ மற்றும் டச்சு மொழிகளை சரளமாகப் பேசும் திறமையைக் கொண்டிருக்கிறார்.
Related Tags :
Next Story