கூடலூரில், நர்சிங் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
கூடலூரில், நர்சிங் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்யாமல் தலைமறைவான வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர் கருணாநிதி காலனியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் கிஷோர் பாண்டியன் (வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், 19 வயது உள்ள மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அந்த மாணவி பெங்களூருவில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரம் இருவீட்டிலும் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கிஷோர் பாண்டியன் தனது காதலை வளர்த்து வந்தார். அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகினர். அதில் அந்த மாணவி கர்ப்பமாகியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிஷோர் பாண்டியனிடம் அந்த மாணவி கூறினார். ஆனால் கிஷோர் பாண்டியன் ஏதாவது காரணம் கூறி மறுத்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த மாணவி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கிஷோர் பாண்டியனை போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர்.
ஆனால் அவர் வரவில்லை. உடனே போலீசார் அவர் வீட்டுக்கு சென்றனர். அங்கு இருந்து அவர் தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு வாலிபர் தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story