நாசரேத் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 30 பவுன் நகை-பணம் திருட்டு


நாசரேத் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 30 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 2 Jun 2019 3:00 AM IST (Updated: 2 Jun 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 30 பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாசரேத், 

நாசரேத் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 30 பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை- பணம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் வேதமுத்து. இவர் சென்னையில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி கமலா (வயது 63). இவர் சம்பவத்தன்று நாசரேத் அருகே உள்ள நாலுமாவடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நாசரேத்துக்கு பஸ் ஏறினார். அப்போது அவர் ஒரு பிளாஸ்டிக் பையில் 30 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை வைத்திருந்தார்.

பஸ் நாசரேத் பஸ் நிலையம் வந்ததும் கமலா தனது பையை பார்த்தார். அப்போது பையில் இருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பிளாஸ்டிக் பையை கிழித்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து நாசரேத் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story