கற்றல் குறைபாடு குழந்தைகளுக்கு புதிய கல்வித்திட்டம்; தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் புதிதாக கல்வித்திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்,
தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனம் மூலம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் தொழில் சார்ந்த கல்வியை படிப்பதற்காக மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் ஒரு புதிய கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் என்ற அமைப்பு கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், இடையில் விடுபட்ட பள்ளி கல்வியை தொடரவும், இளம்வயதில் பள்ளியில் படிக்க முடியாத ஆண்களுக்கும், பெண்கள் மற்றும் தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மிக குறைவான சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களோடு முந்தைய கல்வி முறையில் பெற்ற 2 பாடங்களின் மதிப்பெண்கள் அல்லது ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்ற 3 பாடங்களின் மதிப்பெண்களை உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு மாற்றிக்கொள்ளும் வசதியை இந்த கல்வித்திட்டம் பெற்றுள்ளது. தங்களுடைய அடிப்படை கல்வியை பெற முடியாதவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.
இதற்கு வயது உச்சவரம்பு கிடையாது. 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இதில் விருப்பமான 5 பாடங்களை தேர்ந்தெடுத்து தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி என ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து எளிதாக தங்களுடைய அடிப்படை கல்வியை படிக்க முடியும். மேலும், கணக்கு, அறிவியல், ஆங்கிலம், போன்ற பாடங்களை கடினமாக நினைக்கும் மாணவர்கள் ஏதேனும் 5 பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்க இதில் முடியும். இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு மற்றும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்.
இந்த கல்வி திட்டத்தை மாவட்டத்திற்கு குறைந்தது 5 பள்ளிகளில் முனைப்புடன் செயல்படுத்த சிறுபான்மையினர் நல இயக்ககம் முயன்று வருகிறது. விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை www.nios.ac.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு மண்டல இயக்குனர், தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம், லேடி வில்லிங்டன் வளாகம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story