கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லாவி, அனுமன் தீர்த்தம், பாவக்கல், சிங்காரப்பேட்டை, காரப்பட்டு, பெரிய தள்ளப்பாடி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ஊத்தங்கரை பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி தொடர்ந்து குடிநீர் கிடைக்க வழிவகை செய்வோம் என்று கூறினேன். எனவே நான் தேர்தலில் தோற்றாலும் அந்த வாக்குறுதியை முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறி விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வழிவகை செய்வேன்.
மேலும் நாங்கள் தேர்தலில் தோற்றாலும், ஜெயித்தாலும் எப்போதுமே மக்களை சந்திக்கின்றோம். காரணம் எங்களையும், இந்த மக்களையும் எப்போதும் யாராலும் பிரிக்க முடியாது. தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்று கூறினார். முன்னதாக கே.பி.முனுசாமிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் சைலேஷ் கிருஷ்ணன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அன்பரசு, மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் தொகுதி செயலாளர் திருஞானம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணன், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சின்னபாப்பா சின்னதம்பி, ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், பேரூர் செயலார் சிவானந்தம், பா.ஜனதா நகர பொருப்பாளர் ஜெயராமன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story