நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டர்களுடன் தகராறில் ஈடுபட்ட ஏட்டு கைது
நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டர்களுடன் தகராறில் ஈடுபட்ட ஏட்டுவை போலீசார் கைது செய்தனர். மற்றொரு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் நேற்று முன்தினம் 6 பேர் மதுபோதையில் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு தகராறில் ஈடுபட்ட 6 பேரையும் அவர்கள் பிடித்தனர். அவர்களில் 5 பேரை ஒரு காரில் ஏற்றி கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஒருவர் மட்டும் காரில் ஏற மறுப்பு தெரிவித்ததால் அவரை மட்டும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சென்ற மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் செட்டிக்குளம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, ஆறுகாணியில் போலீஸ்காரராக பணியாற்றும் சைலஸ், ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஒருவரை உடன் அழைத்துச்செல்வதை செல்போன் மூலம் படம் பிடித்தனர். அவர்களில் கிருஷ்ணகுமார் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்த பிரச்சினையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.
சைலஸ் மற்றும் கிருஷ்ணகுமார் செல்போனில் படம் பிடித்ததை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும், ‘ஏன் படம் பிடிக்கிறீர்கள்? நீங்களும் போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள்தானே’ என்று கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே நடுரோட்டில் தகராறு ஏற்பட்டது. மேலும் சைலஸ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர்கள் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் கோட்டார் போலீசார் தகாத வார்த்தைகள் பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏட்டு கிருஷ்ணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ்காரர் சைலசை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், போலீஸ்காரர் சைலசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story