அருப்புக்கோட்டையில் கூடுதல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை - சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தகவல்


அருப்புக்கோட்டையில் கூடுதல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை - சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் கூடுதல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன், பொறியாளர் சேர்மக்கனி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:- நகராட்சியில் அனைத்து வார்டு பகுதி மக்களுக்கு கடந்த காலங்களில் வைகை அணையிலிருந்து கிடைக்க பெற்ற தண்ணீரையும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற தண்ணீரை கொண்டும் 3 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்தனர்.

கடந்த 2 மாத காலமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் 2 ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரின் அளவு பெரிய அளவில் குறைந்ததாலும், அடிக்கடி ஏற்படும் மின்தடையாலும் குடிநீர் தொட்டிகளில் நீரேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீரை சீராக வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் மேற்படி குறைகள் சரி செய்யப்பட்டு தினந்தோறும் 30 லட்சம் லிட்டர் அளவில் சீரான குடிநீர் கிடைக்கப் பெற்று, அதனை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

வறட்சியினை கருத்தில் கொண்டு பொதுமக்களும், குடிநீரை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் உடனிருந்தார்.

Next Story