திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது.
இதில் நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, பெரம்பலூர் மற்றும் ஆரணி, அன்னூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3 ஆயிரம் மூட்டை மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்தனர்.
இந்த ஏலத்தில் விரலி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 12 முதல் ரூ.8 ஆயிரத்து 879 வரையும், கிழங்கு ரகம் ரூ.6 ஆயிரத்து 502 முதல் ரூ.7 ஆயிரத்து 549 வரையும், பனங்காலி ரகம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 512 வரையும் விற்பனை செய்யப்பட்டன.
மொத்தம் 3 ஆயிரம் மூட்டை மஞ்சள் ரூ.1½ கோடிக்கு ஏலம் போனதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story