விவசாயி வீட்டில் தங்க நகைகள்- வெள்ளி பொருட்கள் திருட்டு
தளவாபாளையத்தில் விவசாயி வீட்டில் தங்க நகைகள்- வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிசென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம், தளவாபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 52) விவசாயி. இவரது மனைவி காந்திமதி. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பொன்னுசாமியும், அவரது மனைவி காந்திமதியும் தோட்டத்திற்கு சென்று விட்டனர். மதியம் காந்திமதி மட்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டினுள் சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் உள்ளே சென்றார். அப்போது மர்மநபர் ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். திடீரென அந்தநபர் கத்தியை காட்டி மிரட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக கூறி விட்டு, அங்கிருந்த சுவரில் ஏறி குதித்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டார்.
தங்கசங்கிலி- வெள்ளிபொருட்கள் திருட்டு
இதையடுத்து காந்திமதி வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க காசுகள், 5 பவுன் மதிப்பிலான தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கரூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டை மோப்பம் பிடித்தவாறு சுற்றி, சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story