குறிஞ்சிப்பாடி அருகே, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


குறிஞ்சிப்பாடி அருகே, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 2 Jun 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி அருகே பெத்தனாங்குப்பம் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பிரகாஷ்(வயது 21). இவர் வடலூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த 16 வயது சிறுமியை மொபட்டில் கடத்தி சென்று பெத்தனாங்குப்பத்தில் உள்ள ஆனந்தாயி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்ததாகவும், பின்னர் அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

Next Story