மாணவர்களுக்கு துரித உணவுகள் விற்பனை செய்யக்கூடாது பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு
மாணவர்களுக்கு குளிர்பானங்கள், துரித உணவுகள் விற்பனை செய்யக்கூடாது என பள்ளி, கல்லூரிகளுக்கு மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மாணவர்களுக்கு குளிர்பானங்கள், துரித உணவுகள் விற்பனை செய்யக்கூடாது என பள்ளி, கல்லூரிகளுக்கு மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
சுகாதார குழு
பள்ளிக்கூட கேண்டீன்களில் குளிர்பானங்கள், பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகள் விற்பனை செய்யப்படுவதால் அதை அதிகமாக சாப்பிடும் மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதார குழுவை தொடங்க பரிந்துரை செய்து உள்ளது. இதன்படி பள்ளிகளில் மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் கேண்டீன்களில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை கண்காணிக்க வேண்டும்.
மேலும் தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
விற்பனைக்கு தடை
இதுதவிர குளிர்பானங்கள், துரித உணவுகள் மற்றும் கொழுப்பு, உப்பு, இனிப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த துறை, 2 ஆயிரம் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
Related Tags :
Next Story