பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம் கலெக்டர் சாந்தா தகவல்


பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடங்கப்படவுள்ளது என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் 1428-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாளை (செவ்வாய்க்கிழமை) வேப்பந்தட்டை தாலுகாவில் கலெக்டர் (எனது) தலைமையில் காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் அன்றைய தினம் வெங்கலம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட உடும்பியம், பூலாம்பாடி (கிழக்கு, மேற்கு), வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை (மேற்கு, கிழக்கு), வெங்கலம் (மேற்கு), வெங்கலம்(கிழக்கு), வேப்பந்தட்டை(வடக்கு, தெற்கு) மற்றும் வெண்பாவூர் ஆகிய கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

இதேபோல் நாளை ஆலத்தூர் தாலுகாவில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. அன்றைய தினம் செட்டிக்குளம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், மாவிலங்கை, சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, து.களத்தூர், புது அம்மாபாளையம், கண்ணப்பாடி, தேனூர், இரூர், பாடாலூர்(மேற்கு, கிழக்கு) ஆகிய கிராமங்களிலும், ஜமாபந்தி நடக்கிறது.

குன்னம் தாலுகாவில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் ஜமாபந்தி நாளை தொடங்க உள்ளது. அன்று வடக்கலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட திருமாந்துறை, பென்னகோணம் (வடக்கு, தெற்கு), வடக்கலூர், ஒகளுர் (மேற்கு, கிழக்கு), சு.ஆடுதுறை, அத்தியூர் (வடக்கு, தெற்கு), கிழுமத்தூர் (வடக்கு, தெற்கு), அகரம்சீகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர் மற்றும் வயலப்பாடி ஆகிய கிராமங்களிலும் ஜமாபந்தி நடக்கிறது. பெரம்பலூர் தாலுகாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மஞ்சுளா தலைமையில் ஜமாபந்தி நாளை தொடங்கவுள்ளது. அன்று குரும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட குரும்பலூர் (தெற்கு, வடக்கு), மேலப்புலியூர் (கிழக்கு, மேற்கு), லாடபுரம் (மேற்கு, கிழக்கு), அம்மாபாளையம், களரம்பட்டி மற்றும் சத்திரமனை ஆகிய கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த ஜமாபந்தியில் தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடி தீர்வு கண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story